விஜய்சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்காவிட்டால் அந்த விருதுக்கே மரியாதை இல்லை!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (16:55 IST)
மாமனிதன் விஜய்சேதுபதி-காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்காவிட்டால் அந்த விருதுக்கே மரியாதை இல்லை என ஒளிப்பதிவாளர் சுகுமார் காட்டமாக தெரிவித்துள்ளார். 
தமிழ்சினிமாவில் தங்களது  ஒளி ஓவியத்தால் சில திரைப்படங்களை காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்ற ஒளிப்பதிவாளர் சுகுமார். 
 
தற்போது மாமனிதன், கும்கி-2, தேன் ஆகிய படங்களை முடித்துவிட்டு தெலுங்கு படம் ஒன்றுக்காக ஆந்திரா பக்கம் கிளம்பத் தயாராகி வருகிறார். இந்நிலையில் மாமனிதன் படத்தில் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார் சுகுமார்.
 
 
தர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர்  சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து மாமனிதன் படத்தில் பணியாற்றுகிறேன். இது தர்மதுரை மாதிரியான கதை அல்ல.. வேறு விதமான கதை.. அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம் என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்து கதையாக இது இருக்கும்.. 
 
இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பாகட்டும் காயத்ரியின் நடிப்பாகட்டும் நிச்சயமாக இந்த இருவருக்கும் சிறந்த நடிப்புக்கான தேசிய விருது கிடைத்தே ஆகவேண்டும்.. அப்படி கிடைக்கவில்லை என்றால் அந்த தேசிய விருதுக்கே மரியாதை இல்லை என்றுதான் உறுதியாக சொல்வேன்.. அந்த அளவுக்கு மிக இயல்பான அற்புதமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்..
 
தர்மதுரை படத்தில் பார்த்த அதே விஜய்சேதுபதி தான் மாமனிதன் படத்திலும்.. எந்தவித மாற்றமும் இல்லாத மனிதர்.. கதாபாத்திரங்களுக்காக மட்டுமே தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய மனிதர். சங்கத்தமிழன் போன்ற கமர்ஷியல் படங்களில் விஜய்சேதுபதி நடிக்கலாமா என சிலர் கேட்கிறார்கள்.. விஜய்சேதுபதி போன்ற ஒரு நடிகனை இப்படித்தான் நடிக்க வேண்டும் என ஒரு வட்டத்திற்குள் அடக்கவே கூடாது.. எல்லா வகையான படங்களும் செய்வதற்கு தகுதியான ஒரு நடிகர் தான் என அவர்  கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்