தளபதி 64: படத்தின் மாசீவ் அப்டேட் இதோ!

செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:37 IST)
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஆன்ட்ரியா விஜய்க்கு வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கிடையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் மாசு பிரச்சனைகளுக்கு நடுவில் நடந்து வருகிறது. தற்போது வரை பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் எத்தனை நாள் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்பது தெரியவில்லை. 
 
இந்நிலையில் தற்போது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி, வருகிற டிசம்பர் 5ம் தேதி டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி இணைய இருக்கிறாராம். வில்லன் ரோலில் விஜய் சேதுபதி வெளுத்து வாங்குவர். விஜய் படத்தில் ஹீரோ என்பதால் நிச்சயம் நிறைய மாஸ் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்