இளம் நடிகருக்கு ஜோடியான விஜய்சேதுபதி பட நடிகை

Webdunia
வியாழன், 13 மே 2021 (19:28 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை காயத்ரி பரியேறும் பெருமாள் பட நடிகருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

விஜய்சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சீதக்காதி, புரியாத புதிர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை காயத்ரி. இவர் தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மாமனிதன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் நடிகை காயத்ரி அடுத்து பரியேறும் பெருமாள் பட நடிகர் லிங்கேஷுக்கு ஜோடியாக காயல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர்களுடன் ஐசக் வர்கீஸ், பரத், ஸ்வாகதா, ரமேஷ் திலகக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜேசு சுந்தரமாறன் தயாரிக்கவுள்ளர். மேலும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்