தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நுழைந்து தனது நடிப்பின் மூலம் பல உயரங்களை தொட்டு மக்கள் நாயகமாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் நான்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற வெப் சீரிஸ் தி பேமிலி மேன். இதில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் ,ராஜ் - டிகே இணைந்து இயக்கியிருந்தனர்.
இந்நிலையில் அமேசான் மற்றொரு வெப் சீரிஸ் தயாரிக்கவுள்ளது. இதில், ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி , மாஸ்டர் புகழ் மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக ஷாகித் கபூர் ஜோடியாக ராசி கண்ணா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.