கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

vinoth

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (10:16 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவரின் சமீபத்தைய படங்கள் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவான ‘கிங்டம்’ திரைப்படம் நேற்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஏற்கனவே பார்த்து சலித்துப்போன கதையை எடுத்து வைத்துள்ளதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் மிகச்சிறப்பான வசூலை அள்ளியுள்ளது. முதல் நாளில் தமிழ்நாடு மற்றும் தெலுங்கு பிராந்தியத்தில் சுமார் 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதுவரை விஜய் தேவரகொண்டாவின் எந்த படத்துக்கும் இப்படி ஒரு முதல் நாள் வசூல் கிடைத்ததில்லை. இதில் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 20 லட்சம் ரூபாய் வசூல் என்று சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்