இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (09:14 IST)

சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் குதூகலமாக, இயக்குநராக புகழ் பெற்று இப்போது இசையமைப்பாளராக மாறியிருக்கும் மிஷ்கின், இம்முறை சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின்  ஜட்ஜாக களமிறங்குகிறார்.

 

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களைச் சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமையவிருக்கிறது. 

 

இந்த முறை டெல்டா தமிழ்,கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் என மண்டல வாரியான பிரிவுகளில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 

 

ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த பாடகர்களும், தங்கள் இசைத்திறமையை வெளிக்கொண்டு வரவும், பட்டத்தைக் கைப்பற்றவும் களமிறங்கவுள்ளனர்

 

நான்கு ஜட்ஜ்கள் ஒவ்வொரு மண்டலத்திற்குப் பொறுப்பேற்கின்றனர். 

 

டெல்டா தமிழ் சார்பாக மிஷ்கின் பங்கேற்கிறார்.

 

சென்னைத் தமிழ் சார்பாக இசையமைப்பாளர் தமன், கொங்கு தமிழ்  சார்பாக அனுராதா ஶ்ரீராம், எங்கும் தமிழ் சார்பாக பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கிறார்.

 

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி  வருகின்றனர். 

 

பல இளம் திறமையாளர்களின் வாழ்வின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் வந்துள்ளது. 

 

சூப்பர் சிங்கர் சீசன் 11, புதுமையான களம், மண்டல வாரியான போட்டியாளர்கள், புதிய ஜட்ஜ்கள், என ஆரம்பமே களைகட்டுகிறது. சூப்பர் சிங்கர் 11 சீசன் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்