விஷாலை அடுத்து டிவி ஷோவுக்கு வரும் விஜய்சேதுபதி

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (22:12 IST)
முன்பெல்லாம் திரையுலகில் வாய்ப்பு குறைந்தவர்கள் மட்டுமே டிவிக்கு வருவதுண்டு. ஆனால் தற்போது திரையுலகில் முன்னணி நடிகர், நடிகையாக இருக்கும்போதே டிவியில் ஷோக்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கமல்ஹாசனின் 'பிக்பாஸ்', விஷாலின் 'நாம் ஒருவர்' மற்றும் ஸ்ருதிஹாசனின் 'ஹலோ சகோ' நிகழ்ச்சிகளை அடுத்து விஜய்சேதுபதியும் டிவிக்கு வரவுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு வித்தியாசமான ஷோவை விஜய்சேதுபதி நடத்தவுள்ளதாக விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய்சேதுபதி ஏற்கனவே எட்டு படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி திரைப்படங்கள் தயாரிப்பது, பாடல் எழுதுவது, திரைக்கதை எழுதுவது, டப்பிங் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தற்போது டிவி ஷோவிலும் கலந்து கொள்ளவிருப்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்