பகவத் கீதையை அவதூறு செய்தாரா விஜய்சேதுபதி?

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (09:15 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிகராக மட்டுமின்றி சமூக பொறுப்புள்ளவராக பல சமயங்களில் நடந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு கருத்தை தெளிவாக சொல்வதில் கைதேர்ந்தவர் என்று கோலிவுட்டில் இவருக்கு நல்ல பெயர் உண்டு

இந்த நிலையில் சமீபத்தில் காவல்துறையினர்களின் செயலி ஒன்றின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி, பகவத் கீதை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. ஒரு முன்னணி செய்தி தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளிவந்ததால் பலர் இதனை நம்பத்தொடங்கினர்.

இந்த நிலையில் இதுகுறித்து விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார், அவர் தனது டுவிட்டரில், 'என் அன்பிற்குரிய மக்களுக்கு, பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை, பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட உண்மையான செய்தியையும் போட்டோஷாப் மூலம் திரித்து கூறப்பட்ட வதந்தி செய்தியையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து கடந்த சில மணி நேரங்களாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்