விஜய்க்கு போட்டியாக விஜய்சேதுபதி செய்யும் தரமான சம்பவம்!
வியாழன், 7 பிப்ரவரி 2019 (17:48 IST)
தளபதி விஜய் நடித்து வரும் அடுத்த படமான 'தளபதி 63' திரைப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என்பதும் இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக நடித்து வருவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன
இந்த நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த படமும் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இயக்குனர் அருண்குமாரின் உதவியாளர் பிரபு என்பவர் இயக்கவுள்ள இந்த படம் வாலிபால் விளையாட்டு சம்பந்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் விஜய்சேதுபதி வாலிபால் வீரராக நடிக்கின்றாரா? அல்லது பயிற்சியாளராக நடிக்கின்றாரா? என்பதை படக்குழுவினர் சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளனர். ஒருவேளை பயிற்சியாளராக நடித்தால் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்கள் விளையாட்டு பயிற்சியாளராக நடித்து வரும் நிலை ஏற்படும்
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் டெக்னிக்கல் நபர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக்கும் என்றும் கூறப்படுகிறது