180, 3, 24 வரிசையில் 96

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (21:55 IST)
தமிழ் படங்களின் பெயர்கள் எண்களில் வெளியாவதும் உண்டு. அதில் 180 என்ற படத்தை தொடர்ந்து 3, 24 என்று இரண்டு படங்கள் வெளிவந்தன. தற்போது 96 என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது.



தமிழ் படங்களுக்கும் பாலிவுட், ஹாலிவுட் போன்று தற்போது எண்களில் பெயர் வைப்பது ட்ரெண்டாக மாறி வருகிறது. சித்தார்த் நடிப்பில் முதன்முதலாக 180 என்ற பெயரில் தமிழ் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 3 என்ற படம் வெளிவந்தது.

அதன் பிறகு நீண்ட இலைவெளிக்கு பின் இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் 24 படம் வெளியானது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு படத்துக்கு எண்களில் பெயர் வைத்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் கேமராமேன் பிரேம்குமார் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு 96 என பெயர் வைத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்