விஜய் சொன்ன இரண்டு வார்த்தையில் உச்சத்திற்கு சென்ற கீர்த்தி சுரேஷ்

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (17:34 IST)
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது.  இந்நிலையில் படம் பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 
படப்பிடிப்பு தளத்தில் விஜய் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அவரையே கீர்த்தி சுரேஷ் கலகலவென பேச  வைத்துவிட்டார் என்றால் பாருங்களேன். பைரவா படப்பிடிப்பு முடிந்த அன்று விஜய் கீர்த்தியை பார்த்து நல்லா நடிச்சிருக்கீங்க  என்று கூறினாராம். தளபதி கூறிய இந்த இரண்டு வார்த்தைகளால் கீர்த்தி மகிழ்ச்சியின் உச்சத்தில் இடுக்கிறாராம்.
 
தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் இளைய தளபதி விஜய் தன் நடிப்பை பாராட்டியதை நினைத்து பெருமைப்படுகிறார் கீர்த்தி. தளபதி  ரசிகையான தனக்கு அவருக்கு ஜோடியாகவே நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்கிறார். தமிழில் சூர்யா,  கார்த்தி, தெலுங்கில் நானியுடன் சேர்ந்து ஒடு படமும், பவன் கல்யாண் ஜோடியாக ஒரு படமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்