விஜய் சேதுபதியின் பிரச்சனை பாபி சிம்ஹாவுக்கும்: அப்படி என்ன?

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (17:37 IST)
விஜய் சேதுபதிக்கும் பாபி சிம்ஹாவிற்கும் இருக்கும் பிரச்னை சூப்பர் ஸ்டார் ரஜினி போன்ற இமிடேஷன் தான். 


 
 
தப்போது வெளியான பாம்பு சட்டை வரை ரஜினியை இமிடேட் செய்கிறார் பாபி சிம்ஹா என்ற விமர்சனம் வருகின்றன. கோ 2 படத்திலும் இதே விமர்சனம் தான் வந்தது. 
 
பாபி சிம்ஹாவுக்கு நெருக்கமானவர்கள் நேரடியாகவே இதுபற்றி அவரிடம் கேட்டிருக்கிறார்கள். எனக்கும் புரியுது, ஆனா நான் ரஜினி சாரைப் பார்த்தே வளர்ந்தவன். அதனால ஆட்டோமேட்டிக்கா வருது என்று புலம்பியிருக்கிறார் பாபி சிம்ஹா.
 
இதே பிரச்னை தான் விஜய் சேதுபதிக்கும். றெக்க படத்தில் ஒரு பன்ச் டயலாக் பேச ஒரு மணி நேரத்துக்கும் மேல் எடுத்திருக்கிறார்.
 
கே.எஸ்.ரவிகுமார் இது குறித்து காரணம் கேட்டபோது பன்ச் பேசினாலே ரஜினி சார் மாடுலேஷன் வந்துடுது என்று பதில் சொன்னாராம் விஜய் சேதுபதி.
 
இன்னும் எத்தனை தலைமுறை நடிகர்கள் வந்தாலும் ஸ்டைலுக்கு, பன்ச்சுக்கும் ரஜினி தான் டிரேட் மார்க்.
அடுத்த கட்டுரையில்