விஜய்யின் #ArabicKuthu பாடல் உலகளவில் புதிய சாதனை

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (22:52 IST)
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றுள்ள #ArabicKuthu பாடல்  உலகளவில் புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும் இதுகுறித்து சமீபத்தில் வெளியிட்ட  வீடியோவில் இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் பேசும் ஜாலியான வீடியோ  வைரலானது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்துப் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு  வெளியாகி வைரலானது. இப்பாடல் 48 மணி  நேரத்தில் சுமார் 22 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதாக இயக்கு நர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஸ்பாட்டிஃபையில் இப்பாடல் உலகளவில் புதிய சாதனை படைத்துள்ளது.  அரபிக் குத்து பாடல் வெளியான 48  மணி நேரத்தில்  தினமும் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் 126 வது இடத்தைப் பிடித்துள்ளது.   உலளவில் ஓர் இந்தியப்படால் டாப் 200 படியலில் வருவது இதுவே முதன் முறை என்பதால் விஜய் ரசிகர்கல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்