பிக்பாஸ் சீசன் 9 பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டாவது வாரத்திலேயே லவ் கண்டெண்டுகளும் தொடங்கிவிட்டன. ஒருபக்கம் எஃப்ஜே, ஆதிரை ஜோடி போட்டுக் கொண்டு சுற்ற, மறுபக்கம் அரோரா, துஷார் இடையே ஒரு கதை ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு மீண்டும் இந்த முறை வாட்டர்மெலன் ஸ்டார் ட்ரெண்டிங்கை பிடித்துள்ளார். இந்த முறை கானா வினோத் கூடதான் பஞ்சாயத்து. திவாகரிடம் வம்பு செய்யும் ப்ரவீன், எஃப்ஜே போன்றவர்கள் பெயரை மறந்துவிட்டு அவர்களை வினோத்து உனக்கு அவ்ளோதான்! என திவாகர் திட்ட, பக்கத்தில் இருக்கும் கானா வினோத் அப்செட் ஆகிறார்.
நேற்று இரவு சாப்பாட்டு பிரச்சினையில் விஜே பார்வதி கோபித்துக் கொண்டு இருக்க அவரை வெளியே வர சொல்லி ப்ரவீன் பேச வருகிறார். அவரை திவாகர் வினோத் என்று சொல்லி திட்ட, கானா வினோத் செம கடுப்பாகி விட்டார்.
அதை தொடர்ந்து எதுக்கு எவனை பாத்தாலும் என் பேரையே சொல்லுற என வினோத் வாட்டர்மெலன் ஸ்டார் மேல் பாய, அவர் தெரியாமல் வந்துட்டுப்பா என சிறுபிள்ளை போல பம்முகிறார். இதை பார்த்து விழுந்து சிரித்த ஆடியன்ஸ் இதை ட்ரெண்டாக்க தொடங்கியுள்ளனர்.
மேலும் நேற்று இரவு வாட்டர்மெலன் ஸ்டார் - வினோத் இடையே குறட்டை சம்பந்தமாக வந்த சண்டை, இருவரும் கட்டிலில் அமர்ந்து ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தது போன்றவையும் ட்ரெண்டாகியுள்ளது. பலரும் இந்த இருவர் கூட்டணி நல்ல காமெடி கூட்டணியாக இந்த ஷோவை எண்டெர்டெயின் செய்யும் என எதிர்பார்க்கிறார்கள்.
Edit by Prasanth.K
????????????????most hilarious ???? & #GanaVinoth fight ????????
— Monster ???? (@monsterr_mk) October 13, 2025
???? is sitting like a school kid when the teacher is scolding ????????
Stream for the past 3 hours ????????????????#BiggBossTamil9 #BiggBossTamil #Diwakar #WatermelonStar
pic.twitter.com/RqEdkADXba