விஜய்க்காக எழுதிய கதையில் சல்மான் கானை இயக்கும் வம்சி!

vinoth

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (15:13 IST)
கடந்த 2023 ஆம் ஆண்டு  விஜய், ராஷ்மிகா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரை வைத்து இயக்குனர் வம்சி ‘வாரிசு’ படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படம் என்று படக்குழுவினரால் சொல்லப்பட்டது. ஆனால் ரசிகர்கள் இயக்குனர் வம்சியை ட்ரோல் மெட்டீரியல் ஆக்கினர்.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை வம்சி அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் அடுத்து இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அந்த படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமான மற்றொரு சுவாரஸ்யமான தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கதையை அவர் விஜய்க்காகதான் எழுதினார் என்றும் ஆனால் அந்த கதையில் விஜய் நடிப்பதற்கான சூழல் தற்போது இல்லை என்பதாலும் சல்மான் கானை நோக்கி சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்