GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகும் பராசக்தி படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் எனப் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அறிவித்துள்ளார். இதன் மூலம் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.