நடிகர், கராத்தே மாஸ்டர் ஹூசைனி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

Siva

செவ்வாய், 25 மார்ச் 2025 (08:24 IST)
நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஹூசைனி, நீண்ட நாட்களாக புற்றுநோயால் போராடி வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஹூசைனி, சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மறைந்தார். மறைந்து ஹூசைனிக்கு வயது 60.
 
மதுரையைச் சேர்ந்த ஹூசைனி, கராத்தே மற்றும் வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவர். இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். மேலும், ‘பத்ரி’ திரைப்படத்தில் விஜய்க்கு பாக்ஸிங் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராகவும் நடித்திருந்தார். 
 
சமீபத்தில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் அனைத்தும் சிகிச்சை அளிக்க முயன்றும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இறப்புக்கு முன்பு, தான் உயிருடன் இருக்கும் நாட்கள் குறைந்துவிட்டதாகவும், மருத்துவர்கள் அவரை கைவிட்டதாகவும், அவர் உருக்கமாக கூறியிருந்தார்.
 
இன்று மாலை வரை சென்னை பெசன்ட் நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிறகு சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்