சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் அளித்த பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா?

Webdunia
புதன், 16 மே 2018 (21:08 IST)
சந்தோஷ் நாராயணனுக்குப் பிறந்த நாள் பரிசாக கிரிக்கெட் பேட் ஒன்றை அளித்துள்ளார் விஜய்.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டகத்தி’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். விஜய்யின் ‘பைரவா’, ரஜினியின் ‘கபாலி’ மற்றும் ‘காலா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏகப்பட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
 
சந்தோஷுக்கு நேற்று பிறந்த நாள். அவருக்கு, கிரிக்கெட் பேட் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் விஜய். ‘சனா’ என்பதன் கீழே ‘ஹேப்பி பர்த்டே நண்பா’ என எழுதி கையெழுத்திட்டுள்ளார் விஜய். இந்தத் தகவலைப் புகைப்படத்துடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
 
முன்னதாக, ரஜினி வீட்டுக்குச் சென்று தன் மனைவியுடன் சேர்ந்து ஆசீர்வாதம் வாங்கினார் சந்தோஷ் நாராயணன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்