மலர் டீச்சருக்கு ஏற்பட்ட நிலமையைப் பார்த்தீங்களா?

Webdunia
புதன், 16 மே 2018 (20:55 IST)
மலர் டீச்சராக நடித்து இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட சாய் பல்லவி, தற்போது ஒரு படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார்.

 
‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்தப் படத்தில் மலர் டீச்சராக நடித்து இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டார். மலையாளத்துக்குப் பிறகு தெலுங்குப் படங்களில் நடித்தார்.
 
சாய் பல்லவி நடித்த முதல் தமிழ்ப் படம் ‘தியா’. சமீபத்தில் ரிலீஸான இந்தப் படத்தை, ஏ.எல்.விஜய் இயக்கினார். அபார்ஷனை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார் சாய் பல்லவி. முதலில் ‘கரு’ எனத் தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படம், கடைசியில் பெயர் மாறியது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா ஜோடியாக ‘என்.ஜி.கே’ மற்றும் தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’ படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இதில், ‘மாரி 2’ படத்தில் ‘அராத்து ஆனந்தி’ என்ற கேரக்டரில் ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடித்துள்ளாராம் சாய் பல்லவி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்