பிகில் படத்தில் தான் பயன்படுத்திய ஜெர்ஸியை பரிசளித்த விஜய்.. யாருக்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (17:16 IST)
நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்திருந்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தன்று ரிலீசாகியிருந்தது. கைதி படத்துடன் மோதிய பிகில் ஓரளவிற்கு வசூல் குவித்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. 
இப்படத்தை அடுத்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லியாக ஆன்ட்ரியா நடிப்பதாக தகவல்கள் கசிந்தது. 
 
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் பிகில் படத்தில் தான் பயன்படுத்திய ஜெர்ஸியை அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சௌந்தர் ராஜாவிற்கு பரிசளித்துள்ளார். அதை புகைப்படத்துடன் சௌந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
அந்த பதிவை கண்ட நெட்டிசன்ஸ்  எல்லாமே ஓகே ப்ரோ படத்தில்  உங்களுக்கு என்ன கேரக்டர் சொன்னாங்கனு நடிச்சிங்க....விஜய் படமுன்னு சும்மா நடிச்சிங்களோ..?  உங்க பேட்டி எல்லாம் பார்த்துட்டு ஏதோ பவர்புல் கேரக்டர்னு நினைச்சேன்..இன்னும் சொல்ல போன இந்த படத்துல நீங்க நடிச்சதே பாதி பேருக்கு தெரியாது என கமென்ஸ்ட் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்