தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனனும், மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் 96 பட நடிகை கௌரி கிஷானும், மற்றொரு முக்கிய கேரக்டரில் ரம்யாவும் நடித்து வருகிறார்கள்
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு ஆக்சன் கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருவதாக காலையிலிருந்து ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து நாம் கிடைத்த ஒரு பிரத்யேக தகவலின் படி ஆண்ட்ரியா ஆக்சன் ஹீரோயினாக இந்த படத்தில் நடித்து வருவது உண்மைதான் என்றும் அது மட்டுமின்றி விஜய்க்கு எதிரான ஒரு கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனவே இந்த படத்தில் ஆண்ட்ரியா விஜய்க்கு வில்லியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிவரை டெல்லியில் நடைபெறும் என்றும், அதன்பிறகு சென்னை திரும்பும் படக்குழுவினர் டிசம்பரில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது