சல்மான் கானுடன் பிறந்த நாள் கொண்டாடிய விஜய் பட நடிகை

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (16:30 IST)
பூஜா ஹெக்டே சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் இணைந்து  பிறந்த நாள் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

முகமூடி, விஜயுடன் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பூஜா ஹெக்டே.

இவர், தற்போது, சல்மான் கானின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த படத்துக்கு முதலில்  ’கபி எய்ட் கபி தீவாளி’ என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது “கிஸி கா பாய் கிஸி கா ஜான்” எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், பூஜா ஹெக்டே தன் 32 வது பிறந்த நாளை நேற்று சூப்பர் ஸ்டார் சல்மான் கான், வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்து பிறந்த நாள்விழா கொண்டாடினார்.

'கிஸி கா பாய் கிஸி கா ஜான்'' படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த நிலையில்,  நடிகர் சல்மான் கான் தன் டுவிட்டர் பக்கத்தில் பூஜா ஹெக்டே  தன் பிறந்த நாளின்போது கேக் வெட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்