நெல்லை விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான பணி: துணை கமிஷனர் பாராட்டு

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (18:35 IST)
நெல்லை விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான பணி
இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வந்தாலும் தமிழக மக்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவி செய்யும் மனப்பான்மையால் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட தமிழக அமைச்சர்கள் அனைவரும் இரவு பகலாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தீவிர பணியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த விஜய்யின் ரசிகர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக இரவு பகல் பாராமல் தன்னலம் கருதாது பணி செய்துவரும் காவல்துறையினருக்கு 250 மினரல் வாட்டர் பாட்டில்கள், பிஸ்கட்டுகள், மற்றும் மாஸ்குகளை அளித்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட நெல்லை துணை கமிஷனர் அர்ஜூன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
ஊரடங்கு காலத்தில் கடமையாற்றும் காவலர்களுக்காக திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 250 சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் ,250 மாஸ்க் ,பிஸ்கட் பாக்கட் வழங்கினர். மாநகர காவல்துறை சார்பாக நன்றி’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்