லைகர் தோல்வி கற்றுக்கொடுத்த பாடம்… விஜய் தேவரகொண்டா அளித்த பதில்!

vinoth
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (13:46 IST)
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் படுதோல்வியைத் தழுவியது. லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து இப்போது விஜய் தேவரகொண்டா பரசுராம் இயக்கத்தில் ‘பேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் லைகர் தோல்வி கற்றுக்கொடுத்த பாடம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “எனது நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் லைகர் தோல்வி ஏற்படுத்தவில்லை. ஆனால் படத்தின் ரிசல்ட்டை படத்தின் ரிலீஸுக்கு முன்பே பேசக் கூடாது என்ற தண்டனையை எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்