விஜய் தேவாரகொண்டாவின் லிகர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:35 IST)
விஜய் தேவாரகொண்டா நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாகும் லிகர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் வளரும் நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார் விஜய் தேவாரகொண்டா. இப்போது அவர் நடிக்கும் படத்தை பூரி ஜகன்னாத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் தேவாரகொண்டா. இந்த படத்துக்கு லைகர் (லைன் +டைகர்) என்ற பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இந்தியின் முன்னணி இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்