நிர்வாணமாக கூத்தடிக்க தனியா ஒரு கேரவன்.. ஒரு நடிகருக்கு 6 கேரவன்! - பாலிவுட்டை விளாசி தள்ளிய இயக்குனர்!

Prasanth K

சனி, 27 செப்டம்பர் 2025 (12:47 IST)

பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்கள் செய்யும் அட்டூழியங்களை இயக்குனர் சஞ்சய் குப்தா வெளிப்படையாக பேசியுள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய சினிமாவின் முதன்மை முகமாகவும், பிராந்திய மொழி சினிமாக்களிலேயே அதிகம் பணம் புழங்கும் சினிமாவாகவும் உள்ளது பாலிவுட் சினிமா. 90கள் முதலே பாலிவுட்டின் கான் நடிகர்கள் இந்தியா முழுவதும் பிரபலம். ஆனால் நிலைமை தற்போது அப்படியே மாறி, இந்திய சினிமாவின் அடையாளமாக தென் மாநிலங்களின் தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள திரைப்படங்கள் மாறத் தொடங்கியுள்ளன.

 

இதுகுறித்து சமீபத்தில் ஒரு போட்கேஸ்ட்டில் பேசிய ஷூட் அவுட், ஜிந்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய இந்தி இயக்குனர் சஞ்சய் குப்தா, நடிகர்களின் ஆடம்பரமும், அட்டூழியமுமே இந்தி சினிமாவின் மோசமான சூழலுக்கு காரணம் என விமர்சித்துள்ளார்.

 

அதில் அவர் “அமிதாப் பச்சன், ரித்திக் ரோஷன் போன்ற பெரும் நடிகர்களே ஒரேயொரு மேக்கப் மேன் தான் வைத்திருப்பார்கள். எளிமையாக இருப்பார்கள். அமிதாப் பச்சன் தான் அழைத்து வரும் உதவியாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க அனுமதிக்க மாட்டார். தனது பணத்தில் இருந்துதான் சம்பளம் கொடுப்பார்.

 

ஆனால் எனக்கு தெரிந்த சில நடிகர்கள் படப்பிடிப்பு தளங்களில் அவர்களது பயன்பாட்டுக்கு மட்டுமே 6 கேரவன்கள் கேட்பார்கள். ஒரு கேரவனில் நிர்வாணமாக இருந்துக் கொண்டு எதையாவது செய்வார்கள். சாப்பிட ஒரு கேரவன், ஜிம்முக்கு ஒரு கேரவன் என 6 கேரவன்கள், ஒவ்வொரு கேரவனிலும் வேலைப்பார்க்க 6 வேலையாட்கள் என மொத்த செலவையும் தயாரிப்பாளர் மேல் ஏற்றிவிடுவார்கள்” என விமர்சித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்