என்னது நான் வில்லனா?... ரண்வீர் சிங்கின் ‘டான் 3’ வாய்ப்பை நிராகரித்த விஜய் தேவரகொண்டா!

vinoth

திங்கள், 14 ஜூலை 2025 (10:13 IST)
அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தை 2006 ஆம் ஆண்டு ரீமேக் செய்து நடித்தார் ஷாருக் கான். டான் படத்துக்குக் கதை எழுதிய ஜாவித் அக்தரின் மகன் ஃபர்ஹான் அக்தர் இந்த படத்தை இயக்கினர். ஒரிஜினல் படத்தின் கிளைமேக்ஸில் மாற்றம் செய்து இந்த படத்தை எடுத்திருந்தனர்.

அந்த படம் வெற்றி பெறவே அதன் இரண்டாம் பாகம் 2011 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அந்த படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு இப்போது 13 ஆண்டுகள் கழித்து டான் 3 படம் உருவாக உள்ளது. ஆனால் இப்போது கதாநாயகன் வேடத்தில் ஷாருக் கானுக்குப் பதில் ரண்வீர் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டாவை அணுகியுள்ளது படக்குழு. ஆனால் வில்லனாக நடிக்க விருப்பமில்லை என சொல்லி விஜய் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வேறு சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி சனோன் நடிக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்