படப்பிடிப்பை தொடங்கலாமா? விஜய் பதிலால் சன் பிக்சர்ஸ் அப்செட்!

Webdunia
புதன், 26 மே 2021 (16:55 IST)
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ள தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் எப்போது தொடங்கலாம் என சன் பிக்சர்ஸ் ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி 65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் ஜூன் மாதம் மத்தியில் இருந்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கலாமா என சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யை தொடர்புக் கொண்டபோது ‘செப்டம்பர் மாதம் வரை படப்பிடிப்பு வேண்டாம்’ எனக் கறாராக சொல்லிவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்