சர்கார் வெற்றி விழாவில் மிக்ஸி-கிரைண்டர்: அதிமுகவை வெறுப்பேற்றிய விஜய்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (08:49 IST)
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்தில் மிக்ஸி, கிரைண்டர் உள்பட இலவச பொருட்களை எரிக்கும் காட்சிக்கு அதிமுகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்ததால் தயாரிப்பு தரப்பு அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியது. இதனையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 'சர்கார்' வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. இந்த வெற்றிவிழாவில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இணைந்து 'சர்கார்' வெற்றி விழா கேக்கை வெட்டினர்

இந்த கேக்கின் நடுவில் சர்கார் என்ற வாசகம் எழுதப்பட்டதோடு அதை சுற்றி மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருட்கள் கேக்கில் இடம்பெற்றிருந்தது. படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெற்றி விழா கேக்கில் இடம்பெற வைத்தது அதிமுகவை வெறுப்பேற்றவே என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் 'சர்கார்' படத்திற்கு பிரச்சனை ஏற்படுமோ? என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்