ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதை.. ஆனா..? – கிங் ஆஃப் கோத்தா விமர்சனம்!

வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (16:26 IST)
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் முதன்முறையாக கேங்க்ஸ்டராக களம் இறங்கியுள்ளார் துல்கர் சல்மான். எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கிங் ஆஃப் கோத்தா” எப்படி இருக்கிறது?



கோத்தா என்ற பகுதியில் கேங்க்ஸ்டராக இருப்பவர் கண்ணன் பாய். அவர் வந்ததும் கோத்தாவில் போதை கலாச்சாரம் அதிகரிக்கிறது. இந்த போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த போலீஸாக வரும் பிரசன்னா முயற்சிக்கிறார். அப்போதுதான் அவருக்கு ராஜூவை பற்றி தெரிய வருகிறது.

கண்ணன் பாய்க்கு முன்னாள் கோத்தாவின் டானாக இருந்தவர் ராஜூ (துல்கர்). கண்ணன் பாயின் நண்பன்தான் ராஜூ. ஆனால் ராஜூ கோத்தாவை விட்டு சென்றது ஏன்? என்ன நடந்தது? என்பதை நோக்கி ப்ளாஷ்பேக் நகர்கிறது.

பின்னர் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் ராஜூக்கும் கண்ணனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, தூரோகம், காதல், ராஜூ கோத்தாவை விட்டு ஏன் சென்றான் என தெரிகிறது. பிரசன்னாவின் முயற்சியால் மீண்டும் கோத்தாவிற்குள் நுழையும் ராஜூ எப்படி மீண்டும் கோத்தாவை கைப்பற்றினான் என்பது ஆக்‌ஷன் நிறைந்த கதை.

கண்ணன் பாயாக (சார்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ்) சபீர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். துல்கர் கதாப்பாத்திரத்துடன் இணைந்து நடித்தாலும் பெரிய கேங்க்ஸ்டர் என்ற பாத்திரத்தில் ஒன்றாமல் தெரிகிறார். ஆரம்பத்தில் கேஜிஎப் ராக்கி பாய் போல அரை மணி நேரம் பில்டப் செய்துவிட்டு ப்ளாஷ்பேக் காட்சியில் துரோகத்தால் அழுதுக்கொண்டே ஊரை விட்டு அவர் வெளியேறுவது போல காட்டுவது பலருக்கும் ஏற்கும்படி இல்லை. பெரிய ரவுடி கதாப்பாத்திரத்தை கையாள்வதில் துல்கருக்கும் சில சிக்கல்கள் இருந்ததாக தெரிகிறது.

படத்தின் இசை மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் ஆடியன்ஸை சோர்வு தெரியாமல் காக்கின்றன.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்