பல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டுக்கு வந்த ’’அஜித் பட நாயகி.’’..

சனி, 23 பிப்ரவரி 2019 (15:58 IST)
ராஜா என்ற தமிழ திரைப் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் பிரியங்கா திரிவேதி. இவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருகிறார்.
நடிகை பிரியங்கா திரிவேதி 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் சடுகுடு, ராஜா, போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக அருண்விஜய் நடிப்பில் வெளியான ஜனனம் என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் கன்னட நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டாரான உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார்.
மணமான பின்னர் கடந்த 15 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.  தற்போது மீண்டும்  தமிழ் படம் ஒண்றில் நடித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நடிகர் மஹத் , யாஷிகா நடிப்பில், இயக்குநர் மாக்வென் இயக்கவுள்ள புதிய படமொன்றில் நடிக்க திரிவேதி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்