அஜித் நடித்த 'ராஜா', விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு', அருண்விஜய் நடித்த 'ஜனனம்' உள்பட பல படங்களில் நடித்த நடிகை பிரியங்கா திரிவேதி, கடந்த 2004ஆம் ஆண்டிற்கு பின் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருந்த திரிவேணி, கடந்த சில ஆண்டுகளில் கன்னடம் மற்றும் பெங்காலி மொழி படங்களில் நடித்து வந்தார்
இந்த நிலையில் மகத், யாஷிகா ஆனந்த் ஜோடியாக நடித்து வரும் ஒரு படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க பிரியங்கா திரிவேதி ஒப்புக்கொண்டுள்ளார். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில் அம்சங்கள் கொண்ட இந்த படத்தில் தனது கேரக்டரை சுற்றித்தான் கதை நகர்வதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ்ப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பிரியங்கா திரிவேதி கூறியுள்ளார்.