திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள தாழவேடு கிராமத்தில் வசித்து வந்த விஜய், வெங்கட்ராமன் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்தனர். இதில் வெங்கட்ராமன் என்பவர் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களை இழிவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதாக தெரிகிறது.
இதனையடுத்து, காவல்துறையினர் வெங்கட்ராமனின் தந்தை கன்னியப்பனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.இதனால் ஆவேசம் அடைந்த வெங்கட்ராமன் மது அருந்தும் போது விஜய்யை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார் என்று தெரிகிறது.