விஜய், அஜித் ரசிகர்களுக்கு ஐஸ் வைத்த விக்ரம்பிரபு

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (12:38 IST)
தன்னுடைய படத்தில் விஜய், அஜித்துக்கு பிளக்ஸ் வைத்துள்ளதன் மூலம், அவர்களுடைய ரசிகர்களுக்கு ஐஸ் வைத்துள்ளார் விக்ரம்பிரபு.


 


அறிமுக இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துவரும் படம் ‘பக்கா’. நிக்கி கல்ரானி, பிந்து மாதவி என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பாண்டிச்சேரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. நேற்று, சென்னை, கிண்டி அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் ஷூட்டிங் நடைபெற்றது. அங்குள்ள ஒரு கோயிலுக்கு அருகில் செட் போட்டு, கோயில் திருவிழா நடப்பது போல் படமாக்கியுள்ளனர்.

அப்போது, திருவிழாவிற்கு வரும் பக்த கோடிகளை விஜய்யும், அஜித்தும் வரவேற்பது போல் தனித்தனி கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக, கிராமங்களில் திருவிழா நடக்கும்போது, தங்கள் நாயகன் அனைவரையும் வரவேற்பது போல் கட் அவுட் வைப்பது ரசிகர்களின் வழக்கம். அதைத்தான் இங்கும் செய்துள்ளனர். எனவே, விஜய், அஜித் ரசிகர்கள் விக்ரம்பிரபுவை வாழ்த்தும் அதேசமயத்தில், இந்தப் படத்தில் தீவிர ரஜினி ரசிகையாக நடித்துள்ளார் நிக்கி கல்ரானி.
அடுத்த கட்டுரையில்