தமிழ் மக்களை நன்கு புரிந்து கொண்டேன் – ரூகி சிங்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (12:30 IST)
தமிழையும், தமிழ் மக்களையும் நன்கு புரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார் நடிகை ரூகி சிங்.


 

தாஜ் இயக்கத்தில் நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியம் நடித்துள்ள படம் ‘போங்கு’. இன்று ரிலீஸாகும் இந்தப் படத்துக்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினான ரூகி சிங், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். ‘மிஸ் இந்தியா’, அமைதி மற்றும் மனிதாபிமானத்துக்கான ‘மிஸ் யுனிவர்சல்’ பட்டம் வென்றவர்.

“தமிழ்ப் படங்களின் கதைகள் வித்தியாசமாக இருக்கும். அதனால் ஈர்க்கப்பட்ட நான், ஒருகட்டத்தில் தமிழ்ப் படங்களின் ரசிகையாகவே ஆகிவிட்டேன். எனவேதான், தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டுமென ஆசையாக இருந்தது. அதேபோல், புதிய மொழிகளையும் கற்றுக்கொள்ள விரும்புவேன். இப்போது தமிழையும், தமிழ் மக்களையும் நன்கு புரிந்து கொண்டேன்” என்கிறார் ரூகி சிங்.
அடுத்த கட்டுரையில்