“தளபதி 66 படத்தப் பத்தி பேசவே பயமா இருக்கு”… இயக்குனர் வம்சி பகிர்ந்த தகவல்!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (10:43 IST)
தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குனராக வம்சி பைடிபள்ளி  இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66 ஆவது திரைப்படத்தின் பூஜை விரைவில் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று சென்னையில் அந்த பூஜை நடைபெற்று உள்ளது. தளபதி 66 படத்தின் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் இயக்குனர் வம்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது இந்த படத்தைப் பற்றி பேசும் போது “தளபதி 66 படத்தைப் பற்றி பேசவே பயமாக இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் அன்பும் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கிறது. அதை எந்த விதத்திலும் குறைக்காத ஒரு படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்