இந்திய சினிமாவையே மிரட்டிய கேஜிஎப் 2 படத்தின் எடிட்டர் 19 வயது பையனா?

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (10:37 IST)
கேஜிஎப் 2 படத்தின் எடிட்டராக 19 வயது இளைஞர் ஒருவர் பணியாற்றியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

தற்போது இந்த படம் வெளியாகி இந்திய சினிமாவையே கலக்கி வருகிறது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கேஜிஎப் 2 படத்தின் எடிட்டராக பணியாற்றிய உஜ்வால் குல்கர்னி 19 வயது இளைஞராம். கேஜிஎப் முதல் பாகத்தின் வீடியோக்களை அவர் தன் பாணியில் எடிட் செய்து இணையதளங்களில் பதிவேற்றியுள்ளார் . அதைப் பார்த்து கவர்ந்த கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் அவரையே இரண்டாம் பாகத்தை எடிட் செய்ய சொல்லிவிட்டாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்