போனதுல இருந்து 3 நாள் ஷூட் இல்ல… குழப்பத்தில் தளபதி 65 படக்குழு

வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:00 IST)
ஜார்ஜியாவின் க்ளைமேட்டால் தளபதி 65 படக்குழு 3 நாட்கள் ஷூட் எதுவும் நடத்தவில்லையாம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்றனர் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று படக்குழுவினர் ஜார்ஜியா சென்றடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டு அசத்தி இருந்தது.

இந்நிலையில் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடப்பதில் சிக்கல் வந்துள்ளதாம். என்னவென்றால் ஜார்ஜியாவில் இருக்கும்  வானிலைக் காரணமாக போனதில் இருந்து 3 நாட்கள் ஷூட்டிங்கே நடத்தவில்லையாம். இதனால் சன் பிக்சர்ஸுக்கு மேலும் அதிக செலவு ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்