விஜய்-விக்னேஷ் சிவன் திடீர் சந்திப்பு! நயன் தயாரிப்பில் 'தளபதி 63?

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (20:11 IST)
தளபதி விஜய் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 62' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படும் இயக்குனர்களின் பட்டியல் நீண்டுகொண்டே உள்ளது. அதில் தற்போது புதியதாக இணைந்திருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஏற்கனவே நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்று செய்தி வெளிவந்த நிலையில் அந்த படம் விஜய் நடிக்கும் தளபதி 63' படமாக இருக்குமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 
விஜய், விக்னேஷ் சந்திப்பு பல யூகங்களை எழுப்பியிருந்தாலும் இப்போதைக்கு விக்னேஷ் சிவன் தோள்மீது அன்புடன் கைபோட்டு நிற்கும் விஜய்யின் ஸ்டில் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் டிரெண்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்