அஜித் 62 படத்தை இயக்குகிறாரா விக்னேஷ் சிவன்? பரபரப்பை ஏற்படுத்திய அப்டேட்!
புதன், 16 மார்ச் 2022 (10:11 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் 62 படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன், இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து அவர் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இப்போது திடீர் திருப்பமாக அஜித்தின் அடுத்த படமான அஜித் 62 படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது வெறும் வதந்தியா அல்லது உண்மையில் அது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.