''விஜய் மக்கள் இயக்க ''நிர்வாகிகளுக்கு விஜய் புதிய உத்தரவு

திங்கள், 14 மார்ச் 2022 (22:36 IST)
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  விஜய். இவரது நடிப்பில்  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படம் அடுத்தமாதம் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் விதமாக தங்கள் பகுதியில் செயல்படவேண்டுமென நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் பணியில் ஈடுபடுவதற்கென்றே செலவழிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்,    நடிகர் விஜய்யின் உத்தரவுப்படி, அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்து ஆலோசனையில் பிளாஸ்டிகை ஒழிக்கும் பணியில் மக்களுக்கு துணிப்பை வழக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்