ஹேப்பி பர்த்டே கண்மணி... நயன்தாராவுக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (08:19 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போதில்  இருந்து அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 
 
இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதகவல் அவ்வப்போது செய்திகள் வெளியாகும். திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும் நயன்தாரா பேட்டி ஒன்றில் கூறினார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். 

தற்போது  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் சமந்தாவும் நடிக்கிறார். இந்நிலையில் இன்று தனது 37வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவுக்கு அவரது காதலர் விக்னேஷ் சிவன், "ஹேப்பி பர்த்டே கண்மணி, தங்கமே மற்றும் என் எல்லாமே" என பாசம் பொங்க வாழ்த்தியுள்ளார்.  தொடர்ந்து ரசிகர்களும் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்