என்ன பீஸ்ட் ரிலீஸ் தேதிய இவர் அறிவிக்கிறார்? விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஸ்டேட்டஸ்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (16:34 IST)
பீஸ்ட் படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்த ஸ்டேட்டஸ் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே நாளில் இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் கேஜிஎப் 2 படமும்  ரிலிஸ் ஆகிறது.

இதனால் இரண்டு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால் விஜய் பீஸ்ட் படத்தை ஒரு நாள் முன் கூட்டியே ஏப்ரல் 13 புதன் கிழமை ரிலீஸ் செய்ய சொல்லிக் கேட்டுள்ளாராம். அதனால் அதிக திரைகளில் ரிலீஸ் செய்து முதல் நாள் வசூலை அள்ளலாம் என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஸ்டேட்டஸ் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாகவுள்ள படங்கள் பட்டியலை தேதியோடு பகிர்ந்திருந்தார். அந்த பட்டியலில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து பீஸ்ட் ரிலீஸ் தேதி இதுதானா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்