இந்த படம் பற்றி பேசிய மகேஷ் பாபு அந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற ஆவலில் உள்ளேன். எனக் கூறி இருந்தார். ஆனால் இப்போது ராஜமௌலி தன்னுடைய கூட்டணியை மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. மகேஷ் பாபு படத்தை 2025 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைத்து விட்டு அடுத்த ஆண்டு அல்லு அர்ஜுனோடு இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.