சில்க்கின் மகத்துவத்தை விளக்கும் வித்யா பாலன்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (18:31 IST)
பாலிவுட் நடிகையான வித்யா பாலன், தூய சில்க் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.



 
பாலிவுட்டின் முன்னணி நடிகையான வித்யா பாலன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ‘சில்க் எக்ஸ்போ 2017’ விழாவை அவர்தான் தொடங்கி வைத்தார். “கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு சென்னை வருகிறேன். என் அத்தை இங்குதான் வசிக்கிறார். நான் சென்னைக்கு வந்தபோது மெரினா பீச்சுக்குச் சென்ற ஞாபகங்கள் வருகின்றன” என்று நினைவு கூர்கிறார் வித்யா பாலன்.

தூய சில்க் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான், வித்யா பாலனின் வேலை. “ஒவ்வொரு பட்டுத்துணியை நெய்வதற்கும் நெசவாளர்கள் கடினமாக உழைக்கின்றனர். ஏகப்பட்ட அன்புடனும், அக்கறையுடனும் அவர்கள் நெய்கின்றனர். இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 70 சதவீதம் பேர் பெண்கள். தூய சில்க்கைத் தேர்ந்தெடுத்து நாம் வாங்கும்போது, அவர்களுக்கான மரியாதையைத் தருகிறோம்” என்கிறார் வித்யா பாலன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்