அமலா பாலுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க 20 டேக் எடுத்த நடிகர் - மனுஷன் மஜா பண்ணியிருக்காருப்பா!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (18:29 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார்.
 
இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இதனால் கவர்ச்சியான போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் அமலா பாலுடன் மைனா படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து நடிகர் விதார்த் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். " மைனா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் அமலா பாலின் முகத்திற்கு மிக நெருக்கமாக சென்று முத்தமிடாமல் விலகுவது போல ஒரு காட்சி ( கிட்டத்தட்ட முத்தம் கொடுப்பது போல்) எடுக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் எனக்கு கூச்சமாக இருந்தது. எனவே அந்த காட்சியில் நடிக்க நான் 20 முறை டேக் எடுத்தேன். பாவம் அமலா பால் நொந்துபோய்டார் என்று கூறியுள்ளார் விதார்த்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்