விதார்த் நடிக்கும் புதிய படத்தின் வித்தியாசமான டைட்டில்!

சனி, 15 ஏப்ரல் 2023 (15:17 IST)
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களிலோ துணை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவர் விதார்த். மைனா படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய அவர் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாகவும் நடித்தார். ஆனால் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றி பெறாததால் இப்போது மீண்டும் வில்லன் வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில் அவர் மிஷ்கின் தம்பி ஆதித்யா இயக்கும் ‘டெவில்’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் இப்போது புதுமுக இயக்குனர் இயக்கும் வைப்பர் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுதி இருக்கிறார். மணிமாறன் நடராசன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்