மேலும், இந்தியாவில் உள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று காலை 6:00 மணிக்கே திரையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த படத்தின் விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 90% பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் ஆக்சன் காட்சிகள், அஜித் - திரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகள், அர்ஜுனனின் வில்லத்தனம், அனிருத்தின் பின்னணி இசை, மகிழ் திருமேனியின் விறுவிறுப்பான இயக்கம் என படம் முழுவதுமாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
2024 ஆம் ஆண்டு "துணிவு" திரைப்படம் வெளியான நிலையில், இரண்டு வருடம் கழித்து அஜித் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை அடுத்து, அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.