சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, முதல் நாள் முதல் காட்சிக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை டிக்கெட் விலை உயர்த்தி வசூல் செய்யப்படுகிறது. குறிப்பாக, அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் தியேட்டர்களில் இன்னும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவது குறையும் என்று உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். "விடாமுயற்சி" படத்திற்காக ஒரு டிக்கெட் ரூ.500க்கு விற்பனை செய்ய வேண்டும் என விநியோகஸ்தர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுவதாக மதுரை தியேட்டர் உரிமையாளர் ஒருவர் தெரிவித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் திருட்டுத்தனமாக படம் பதிவேற்றம், ஓடிடி உள்பட பல சவால்களை சந்தித்துதான் தியேட்டர் நடத்திக் கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் இவ்வாறு நெருக்கடி செய்தால், தியேட்டர்களுக்கு பொதுமக்கள் வரமாட்டார்கள் என்றும் தியேட்டர் அதிபர்கள் கூறுகின்றனர். இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.