விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு; திரையுலகினர் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (16:18 IST)
விஜய் சேதுபதி ஹீரோ ஆன பின்னரும் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த நிலையில் இனி கெஸ்ட் ரோல்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம்.


 

 
ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் ஹீரோவானார். அதன் பின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இவர் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை எளிதாக கவர்ந்துவிட்டார்.
 
ஹீரோவாக நடித்தாலும் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தார். தினமும் அவரிடம் வந்து யாராவது என் படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணிக்கொடுங்க என கேட்பது வழக்கம். அவரும் கேட்பவர்களுக்கெல்லாம் நடித்து கொடுத்து வந்த. ஆனால் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பவர்கள் இது வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
இதனால் இனி விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாரம். இதனால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். பெரிய ஹீரோவாக இருந்தாலும் சின்ன ரோலில் கேட்டபோதெல்லாம் நடித்து கொடுத்தவர் தற்போது அதற்கு தடை போட்டது திரையுலகில் உள்ள பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்